இது தான் மாற்றமா..? 100 நாளில் 546 குற்றச் சம்பவங்கள்...சர்க்கஸ் சர்க்காரின் சாதனை இது - திமுக பரந்தாமன் பரபரப்பு குற்றச்சாட்டு..!
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன்,
கடந்த 100 நாட்களில் மட்டும் மாநிலத்தில் 546-க்கும் மேற்பட்ட பெரிய குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் புள்ளிவிவரங்களுடன் தெரிவித்துள்ளார்
செய்தியாளர் சந்திப்பில் பேசிய பரந்தாமன், தவெக அரசு தனது 100 நாள் சாதனைகளைக் கொண்டாடி வரும் வேளையில், மாநிலத்தின் நிஜமான பாதுகாப்புச் சூழல் கவலைக்கிடமாக இருப்பதாகக் குறிப்பிட்டார். கொலை, கொள்ளை, வழிப்பறி மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வருவதாகவும், காவல்துறை உரிய சுதந்திரத்துடன் செயல்பட முடிவதில்லை என்றும் அவர் சாடினார்.
குறிப்பாக, சிறைத்துறையில் காவல் மரணங்கள் அதிகரித்து வருவது குறித்தும், விசாரணை கைதிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியிருப்பது குறித்தும் அரசு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். 100 நாள் சாதனை புத்தகம் வெளியீடு என்ற பெயரில் விளம்பரம் தேடிக் கொள்ளும் அரசு, அடித்தட்டு மக்களின் பாதுகாப்பை முற்றிலும் மறந்துவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.
அரசின் இந்த அலட்சியப் போக்கைக் கண்டித்தும், சட்டம் ஒழுங்கை உடனடியாகச் சீரமைக்க வலியுறுத்தியும் திமுக சார்பில் தீவிரப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என அவர் எச்சரித்தார். எதிர்க்கட்சியான திமுக முன்வைத்துள்ள இந்த 546 குற்றச் சம்பவங்கள் தொடர்பான புள்ளிவிவரக் குற்றச்சாட்டு, தவெக அரசுக்கு அரசியல் ரீதியாகப் பெரும் சவாலையும் விவாதத்தையும் தோற்றுவித்துள்ளது.
#WATCH | 100 நாளில் 546 குற்றச் சம்பவங்கள்.. சர்க்கஸ் சர்க்காரின் சாதனை இது - பரந்தாமன், திமுக வழக்கறிஞர் அணி இணை செயலாளர்#SunNews | #DMK | #TVKVijay | #TVK pic.twitter.com/PoAwvQ5aKB
— Sun News (@sunnewstamil) August 17, 2026

