இது தேவையா..? ரீல்ஸ் மோகத்தால் 80 அடி கிணற்றில் 2 மணி நேரமாக உயிருக்கு போராடிய இளைஞர்..!
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மூலசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பரத் (வயது 19) மற்றும் விக்னேஷ் (வயது 18). நண்பர்களான இவர்கள் இருவரும் ரீல்ஸ் எடுப்பதற்காக அதே ஊரில் உள்ள செல்லப்பா என்பவரின் விவசாயக் கிணற்றிற்கு சென்றுள்ளனர்.
80 அடி ஆழமுள்ள அந்த விவசாய கிணற்றின் மேல் நின்று இளைஞர்கள் இருவரும் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது திடீரென அவர்கள் வைத்திருந்த செல்ஃபோன் கிணற்றுக்குள் விழுந்ததுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கிணற்றில் விழுந்த செல்ஃபோனை எடுப்பதற்காக, இளைஞர்கள் பரத் மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரும் கிணற்றில் இருந்த பைப் வழியாக உள்ளே இறங்கியுள்ளனர். செல்ஃபோனை எடுத்துக் கொண்டு விக்னேஷ் என்ற இளைஞர் முதலில் அங்கிருந்த பைப்பை பிடித்துக் கொண்டு கிணற்றின் மேலே ஏறி வந்துள்ளார்.
அதன் பிறகு, பரத் என்ற இளைஞர் பைப்பை பிடித்து மேலே ஏற முயன்றபோது, பைப் வழுக்கியதால் பரத் மீண்டும் கிணற்றிற்கு உள்ளேயே சிக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. கிணற்றுக்குள் சிக்கி இருந்த பரத்தை, சுமார் 2 மணி நேரமாக விக்னேஷ் மீட்க முயற்சி செய்துள்ளார்.
முயற்சி பலனளிக்காததால், இதுகுறித்து விக்னேஷ் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறை வீரர்கள், 80 அடி ஆழமுள்ள கிணற்றில் சிக்கி இருந்த பரத்தை, கிணற்றில் இறங்கி பத்திரமாக மீட்டனர்.
ரீல்ஸ் மோகத்தால் 80 அடி ஆழ கிணற்றில் சிக்கிய இளைஞர்! 2 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்! Reels Danger | Rescue Operation | Fire And Rescue #NewsTamil24x7 #Ulundurpet #InstagramReels https://t.co/oNx7Dvn7HO
— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) November 21, 2026

