பள்ளி குழந்தைகளுக்கு இப்படி தான் சாக்லேட் கொடுப்பீங்களா..? பாஜக எம்.எல்.ஏ-வுக்கு வலுக்கும் கண்டனம்!

 
1

கேரளா திருவனந்தபுரத்தில், கட்டேலா மாடல் ரெசிடன்ஷியல் ட்ரைபல் பள்ளியில், சமீபத்தில் தொடக்க விழா நடைப்பெற்றது. அப்போது அதில் கலந்து கொண்ட பாஜக கழக்கூட்டம் தொகுதி எம்.எல்.ஏ முரளிதரன், அங்கு அப்பள்ளியில் புதிதாக சேர்ந்து அமர்ந்திருந்த குழந்தைகளுக்கு சாக்லேட்டுகளை வழங்கினார். ஆனால், அவர் எப்படி வழங்கினார் என்பதுதான் அனைவரையும் திடுக்கிட வைத்தது.

முரளிதரன், அக்குழந்தைகளுக்கு சாக்லேட்டுகளை வழங்கும் போது, அதனை கையிலெடுத்து கொடுக்காமல் அவர்கள் அமர்ந்திருந்த டெஸ்க் மீது கவரில் இருந்த சாக்லேட்டை ஒவ்வொன்றாக போட்டுவிட்டு சென்றார். 

பாஜக எம்.எல்.ஏ இப்படி சாக்லேட்டை கொட்டிய பள்ளி, பழங்குடியினர் அதிகம் பயிலும் பள்ளியாகும். அந்த குழந்தைகளிடத்தில், முரளிதரன் தீண்டாமை பார்த்து சாக்லேட்டுகளை வேண்டுமென்றே கையில் கொடுக்காமல் கீழே கொட்டியதாக பலரும் அவருக்கு கண்டனங்களை தெரிவித்தனர்.

அப்படி கண்டனம் தெரிவித்த நபர்களுள், முன்னாள் கேரள அமைச்சர் வி.சிவன்குட்டியும் ஒருவர். அவர், முரளிதரன் எப்படி, பள்ளி மாணவர்களிடம், அதுவும் பள்ளிக்குள்ளேயே இப்படி நடந்து கொள்ள முடியும்? என்று கேட்டதோடு, அந்த பள்ளியில் பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் பிற தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த குழந்தைகள் படிப்பதாகவும், முரளிதரன் இப்படி செய்தது பள்ளி மாணவர்களின் கண்ணியத்திற்கு இழைக்கப்பட்ட அவமானம் என்று கூறிய அவர், அவர்களின் மனநிலையில் இது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்தார். மேலும், தனது இந்த செயலுக்கு உடனடியாக முரளிதரன் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.