ரூ.2000க்கு மேல் ஜிபே மூலம் பணம் அனுப்பினால் கூடுதல் கட்டணமா? அக்.15 முதல் புது ரூல்ஸ்!
அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி முதல் யுபிஐ பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்படும் என்று செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பொதுமக்கள் மற்றும் சிறு வணிகர்கள், சாதாரண வாடிக்கையாளர்கள் ஆகிய பல தரப்பினரை புதிய UPI விதிகள் பாதிக்கிறது என்பதால் குறிப்பிட்ட தொகை வரையிலான யுபிஐ பேமென்ட்டுக்கு எந்த கட்டணமும் கிடையாது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, பல சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் எழுந்துள்ள நிலையில், ஜிபேவில் 2000 ரூபாய்க்கு மேல் அனுப்பினால், அதற்கு கட்டணம் விதிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
P2P என்று சொல்லப்படும் இரண்டு தனி நபர்களுக்கு இடையேயான யுபிஐ பரிவர்த்தனைக்கு எந்தவிதமான கட்டணமும் விதிக்கப்படாது. உங்கள் நண்பருக்கு அல்லது இன்னொரு நபருக்கு, Gpayவில் நீங்கள் 2000 ரூபாய் அல்லது அதற்கு மேல் அனுப்பினால் கூட பரிவர்த்தனை கட்டணம் விதிக்கப்படாது. இது ஜிபி மட்டுமல்லாமல் அனைத்து விதமான P2P upi பரிவர்த்தனைகளுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா முழுவதும் தனிநபர் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எந்த கட்டணமும் இல்லை என்பதை MDR பாலிசி உறுதி செய்துள்ளது. அக்டோபர் 15 2026 முதல் புதிய யுபிஐ விதிகள் அமல்படுத்தப்பட்டாலுமே, இது தனிநபர் யு பி ஐ பரிவர்த்தனைகளுக்கு பொருந்தாது.
2000 ரூபாய் அல்லது அதற்கு அதிகமாக எவ்வளவு தொகை அனுப்பினாலும், உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் அல்லது தெரிந்தவர்களுக்கு Gpay அல்லது வேறு யுபிஐ வழியாக பணம் அனுப்பும் பொழுது,
- அனுப்புபவர் மற்றும் பெறுபவர் என்று இரண்டு தரப்புக்குமே எந்த கட்டணமும் விதிக்கப்படாது ஏற்கனவே இருக்கும் நடைமுறை தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.
- உங்களுக்கு இரண்டு அல்லது மூன்று யுபிஐ கணக்குகள் இருந்து அதில் Gpay வழியாக உங்களுக்கு நீங்களே பணம் அனுப்பினாலும் (Self Transfer), அதற்கான upi கட்டணம் விதிக்கப்படாது.
உங்கள் வங்கி கணக்கு மற்றும் தினசரி யுபிஐ பரிவர்த்தனைக்கான அதிகபட்ச வரம்பு ஆகியவற்றின் அடிப்படையில், உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அல்லது தனி நபர் கணக்கிற்கு நீங்கள் ஜிபி வழியாக எவ்வளவு தொகை வேண்டுமானாலும் எந்த கட்டணமும் இல்லாமல் பரிவர்தனை செய்யலாம். அதுமட்டுமில்லாமல் GPay உட்பட எந்த UPI பிளாட்பார்மும், யுபிஐ பரிவர்த்தனைகளுக்காக உங்களிடம் கட்டணங்கள் வசூலிக்காது.
நுகர்வோரை பாதிக்கும் வகையில் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்படவில்லை என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது. நுகர்வோருக்கு யுபிஐ சேவைகள் குறிப்பிட்ட தொகை என்று வரையறுக்கப்படாமல் முற்றிலும் இலவசமாகவே இருக்கும். 2000 ரூபாய்க்கு மேல் செய்யப்படும் யு பி ஐ பரிவர்த்தனைகளுக்கான கட்டணம், திருத்தப்பட்ட வணிகர் தள்ளுபடி விகிதம் கட்டமைப்பு படி வணிக பரிவர்த்தனைகளுக்கு விதிக்கப்படும்.

