உங்கள் பகுதியில் 500 மீட்டருக்குள் டாஸ்மாக் இருக்கா? உடனே செல்பி வீடியோ போடுங்க! 'வீ தி லீடர்ஸ்' வேண்டுகோள்!

 
Annamalai

பொதுமக்களுக்கு அண்ணாமலை தலைமையிலான 'வீ தி லீடர்ஸ்' அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதன் அறிக்கை: கல்வி நிறுவனங்கள், கோவில்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து, 500 மீட்டர் சுற்றளவிற்குள் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால், சென்னையில் மேற்கொண்ட கள ஆய்வில், 500 மீட்டருக்குள், பல டாஸ்மாக் கடைகள், இன்னமும் இயங்குவது உறுதியானது.தலைநகரிலேயே இந்த நிலை என்றால், பிற மாவட்டங்களிலும், இதே நிலை இருக்கக்கூடும்.

எனவே, உங்கள் பகுதியில், 500 மீட்டருக்குள் இயங்கும், டாஸ்மாக் கடைகளுக்கு முன்பும், கல்வி நிறுவனம், கோவில், பேருந்து நிலையம் முன்பும், 'செல்பி' வீடியோவாக பதிவு செய்யுங்கள். அதோடு, இரண்டிற்கும் இடையிலான துாரம் உள்ளிட்ட தகவல்களை தெளிவாக குறிப்பிட்டு, ரீலாக பதிவு செய்து கூகுள் விண்ணப்பத்தில் அனுப்பி வையுங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.