#BIG NEWS : அமெரிக்காவில் எச்1பி விசா நடைமுறையை முடக்க திட்டம்?

 
Q

அமெரிக்காவில் வெளிநாட்டினரை தற்காலிகமாக பணியமர்த்த அங்குள்ள நிறுவனங்கள் 'எச்-1பி' விசாவை அனுமதிக்கின்றன. இதற்கு எதிராக குடியரசு கட்சி எம்.பி.,க்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

 

அமெரிக்கர்களை நீக்கிவிட்டு குறைந்த சம்பளத்தில் வெளிநாட்டு தொழிலாளர்களை நிரப்பவே இந்த விசா பயன்படுத்தப்படுகிறது என்பதும் அவர்கள் குற்றச்சாட்டு ஆகும்.

 

இதன் தொடர்ச்சியாக, 'எச்1பி விசா துஷ்பிரயோக தடுப்புச் சட்டம், 2026' என்ற மசோதாவை டெக்சாஸ், கலிபோர்னியா, அரிசோனா மாகாண எம்.பி.,க்கள் அந்நாட்டு பார்லிமென்டில் தாக்கல் செய்துள்ளனர். மசோதாவில், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு 'எச்1பி' விசா வழங்கும் நடைமுறைக்கு முழுமையாக தடை விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்சமாக ஆண்டு வருமானம் 1.67 கோடி ரூபாயாக இருக்கவும், இந்த விசாவில் இருந்து நிரந்தர குடியுரிமைக்கு மாறுவதை தடை செய்யவும், மாணவர்களுக்கான பயிற்சி திட்டத்தை ரத்து செய்யவும் மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா நிறைவேறினால், இந்திய ஐ.டி., நிறுவனங்கள் மற்றும் அதன் ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.