மசோதாக்கள் ஒப்புதலில் தாமதமா? - ஆளுநர் மாளிகை விளக்கம்

 
மசோதாக்களுக்கு ஒப்புதல் - ஆளுநர் விளக்கம் மசோதாக்களுக்கு ஒப்புதல் - ஆளுநர் விளக்கம்

தமிழக அரசு அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் தாமதம் என ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. 

தமிழக அரசு அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் தாமதம் என ஆதாரமற்ற, உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகள் பொதுவெளியில் முன்வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதில் தாமதம் என்றும் புகார் கூறப்படுகிறது. 

இந்நிலையில் ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய அரசியலைப்பின் விதிகளின்படி, தமிழ்நாடு ஆளுநர் செயல்பட்டுவருகிறார். அக்டோபர் 31 ஆம் தேதி வரை பெறப்பட்ட மொத்த மசோதாக்களில் 81% மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களுக்குள் 95% மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. குடியரசு தலைவரின் பரிசீலனைக்காக 13% மசோதாக்கள் அனுப்பப்பட்டுள்ளன என்றும் ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. 13% மசோதாக்களில் 60% மாநில அரசின் பரிந்துரையின் பேரில் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள மசோதாக்கள் அக்டோபர் 2025 கடைசி வாரத்தில் பெறப்பட்டு பரிசீலனையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.