#BREAKING சென்னை பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் வருகிறதா?

 
ச்

சென்னை பட்டினப்பாக்தத்தில் உள்ள 17 ஏக்கர் அரசு நிலத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க முதல்வர் தரப்பு விரும்புவதாக கூறப்படுகிறது.

தமிழக முதல்வர் அலுவலகம் இடம் மாறுகிறது; பணிகள் தொடக்கம்


சென்னை பட்டினப்பாக்தத்தில் உள்ள 17 ஏக்கர் அரசு நிலத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க முதல்வர் தரப்பு விரும்புவதாக கூறப்படுகிறது. பட்டினப்பாக்கம் கடலுக்கு அருகில் இருப்பதுடன், முதல்வரின் வீடும் அருகில் உள்ளது. இந்தக் காரணங்களும் அந்த இடத்திற்கான விருப்பத்தில் இடம்பெறுவதாக கூறப்படுகிறது. பட்டினப்பாக்கம் இடம் புதிய தலைமைச் செயலகத்திற்கு பொருத்தமாக இருக்குமா என அரசு பொறியாளர்கள் முதற்கட்ட ஆய்வு நடத்தியுள்ளனர்.


அடுத்தடுத்த ஆய்வுகளில் இடம் பொருத்தமானது என உறுதி செய்யப்பட்டால், புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கும் என தெரிகிறது. பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டம் கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சிக் காலங்களிலும் பரிசீலிக்கப்பட்டது. ஆனால், இயற்கைப் பேரிடர் அபாயங்களை கருத்தில் கொண்டு கைவிடப்பட்டது குறிப்பிடதக்கது.