பரந்தூர் விமான நிலைய திட்டம் தொடர்கிறதா அல்லது கைவிடப்படுகிறதா?- மத்திய அரசு விளக்கம்

 
பரந்தூர் விமான நிலையம்:  பேச்சுவார்த்தையால் கைவிடப்பட்ட  மக்கள் பேரணி.. 

பரந்தூர் விமான நிலைய திட்டத்தைத் திரும்பப் பெறுவது, மாற்றுவது அல்லது கைவிடுவது தொடர்பாக தமிழக அரசிடமிருந்து எந்தவொரு கோரிக்கையும் மத்திய அரசுக்கு வரவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

பரந்தூரில் அமையவுள்ள புதிய பன்னாட்டு கிரீன்ஃபீல்ட் விமான நிலையத் திட்டத்தின் தற்போதைய நிலை என்ன? என்ற எம்.பி. தயாநிதி மாறன் எழுப்பிய கேள்விக்கு மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் முரளிதர் மோஹோல் பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக எழுத்துப்பூர்வ பதில் அளித்த மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் முரளிதர் மோஹோல், பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்காக 2025 ஏப்ரல் 7 அன்று TIDCO நிறுவனத்திற்கு கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மே 2026-க்குப் பிறகு திட்டத்தைத் திரும்பப் பெறுவது, மாற்றுவது அல்லது கைவிடுவது தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் இருந்து தகவல் இல்லை. பரந்தூர் விமான நிலையத்தை கைவிடுவதாக தமிழக அரசிடமிருந்து எந்தவொரு கோரிக்கையோ அல்லது கடிதமோ மத்திய அரசுக்கு வரவில்லை. நிலம் கையகப்படுத்துதல், சுற்றுச்சூழல் & பிற தேவையான சட்டப்பூர்வ அனுமதிகள், நிதி ஆதாரங்களைத் திரட்டுதல் நடைபெறுகிறது. கட்டுமானத்தை முடிப்பது போன்ற அனைத்துப் பொறுப்புகளும் திட்டத்தை முன்மொழிந்த தமிழக அரசையே சாரும். நிலம் கையகப்படுத்துதல், அனுமதிகள், நிதி நிறைவு ஆகியவற்றைப் பொறுத்தே கட்டுமானக் காலக்கெடு அமையும் எனக் கூறியுள்ளார்.