பல்லவன் இல்லத்திற்கு மாறுகிறதா புதிய தலைமை செயலகம்? – தமிழக அரசின் அதிரடி யோசனை!

 
govt

பட்டினம்பாக்கத்தில் முதல்வர் விஜய் வீடு அருகே உள்ள இடத்தில், தலைமை செயலகம் கட்ட அரசாணை வெளியானது. அந்த இடத்தில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால், தமிழக அரசு தனது முடிவை கைவிட முடிவு செய்துள்ளது.

புதிய தலைமைச் செயலகத்தை பல்லவன் இல்லத்தில் அமைக்க முடிவு செய்தது. 13.22 ஏக்கர் பரப்பு கொண்ட இந்த இடத்தில் மெட்ரோபொலிட்டன் போக்குவரத்துக் கழகம்(எம்டிசி), மாநில விரைவுப் போக்குவரத்துக் கழகம் ஆகியவை இங்கு செயல்படுகின்றன.

அதிகாரிகள் கூறியதாவது: '' புதிய தலைமை செயலகம் அமைப்பதற்கான பரிசீலனையில் பல்லவன் இல்லமும் உள்ளது. இறுதி முடிவு எடுக்கவில்லை. ஒரு வாரத்தில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கிறோம். தலைமை செயலகம் அமைப்பதற்கு உகந்த இடமாக இது இருக்கும். பஸ், புறநகர் ரயில் மற்றும் மெட்ரோ ரயில் வாயிலாக ஊழியர்கள் இங்கு வந்து செல்ல முடியும்,'' என்றனர்.

இந்த இடம் அரசுக்கு சொந்தமானது. போதுமான இடம் உள்ளதால் கூடுதலாக கையகப்படுத்த தேவையில்லை. இதனால் பொது மக்கள் மத்தியில் எதிர்ப்பு வராது. மேலும், அதிகாரிகள், ஊழியர்கள் மட்டுமின்றி மக்களும் எளிதாக இங்கு வந்து செல்ல முடியும்.