பால் விலை உயர்வு உண்மையா .? ஆவின் நிறுவனம் விளக்கம்..!!

 
Q

பால் விலையை லிட்டருக்கு ஐந்து ரூபாய் உயர்த்த, அரசுக்கு ஆவின் நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில், பால் விலை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. விலை உயர்வு தொடர்பாக வெளியாகும் தகவல்களைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

* பால் விலை உயர்வு தொடர்பாக வெளியான செய்தி தவறானது.

* பொதுமக்கள் உறுதிப்படுத்தப்படாத செய்திகளை நம்ப வேண்டாம்.

* உற்பத்தியாளர்களின் நலன், நுகர்வோரின் நலனை ஒருங்கிணைத்து ஆவின் செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளது.