100 தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டபோது ஆந்திராவுக்கு ஆய்வுக்குழு சென்றதா? வேல்முருகன் ஆவேசம்

 
v

 வடமாநிலத்தவர்களின் எண்ணிக்கையை தமிழ்நாட்டில் அதிகப்படுத்தி அதன் மூலம் பாஜக வளர நினைக்கிறது.  இந்த சதி திட்டம் முழுமையாக நிறைவேறும் காலத்தில் தமிழகத்தின் பெரும் கட்சிகளாக விளங்கும் திமுகவும் அதிமுகவும் காணாமல் போக்கும் என்று எச்சரித்துள்ளார் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன்.

 இது குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கையில் ,  உத்தர் பிரதேச பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் குமாரா , ஹிந்தியில் பேசியதற்காகவே தமிழ்நாட்டில் 12 பீகார் தொழிலாளிகள் அடித்துக் கொல்லப்பட்டனர் என்ற பொய் செய்தியே திட்டமிட்டு பரப்பி இருக்கிறார்.  இதற்கு வடமாநில ஊடகங்களும் துணை போயிருக்கின்றன.

s

 அமைதி பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டை உலக அரங்கில் வன்முறை மாநிலமாக காட்டும் முயற்சி என்பது மட்டுமல்லாமல் இந்த விவகாரத்தில் பாஜக ஆர். எஸ் எஸ் கும்பலின் சதித்திட்டம் இருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது .  தமிழ்நாட்டு மக்கள் தங்களின் சொந்த மண்ணில் பிற மாநிலத்தவர்களிடம் அடி வாங்கியும் தங்களின் உரிமைகளையும் இழந்து வருகின்றனர் .  இதற்கு மேலாக ஈரோட்டில் காவல்துறையே வட மாநிலத்தவர்களிடம் அடிவாங்கிய சம்பவங்கள் உண்டு.

 தமிழ்நாட்டில் 12 பீகார் தொழிலாளிகள் அடித்துக் கொல்லப்பட்டார்கள் என்ற வதந்திக்கு தமிழ்நாடு முதல்வரும் தமிழக காவல்துறையும் உரிய விளக்கம் அளித்தும் பீகார் மாநில அரசு இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்ய குழு ஒன்றை தமிழ்நாட்டில் அனுப்பி இருக்கிறது.  இந்த நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது. 
 தமிழ்நாடு அரசை இது இழிவு படுத்தும் செயல்.

ப்

 1991 ஆம் ஆண்டில் காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தில் 100க்கும் மேற்பட்ட தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் . 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாட்டில் விரட்டியடிக்கப்பட்டார்கள்.   அப்போது கர்நாடகத்திற்கு எந்த ஒரு குழுவும் தமிழ்நாட்டில் இருந்து அனுப்பப்படவில்லை.   முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவில் இருந்து ஏராளமான தமிழர்கள் தாக்கப்பட்டனர்.   தமிழக பெண்கள் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டனர்.   அப்போதும் தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு எந்த குழுவும் அனுப்பப்படவில்லை.    ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போதும் கூட தமிழ்நாட்டில் இருந்து எந்த குழுவும் செல்லவில்லை.   ஆனால் டெல்லி ,உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் பாஜக ஆர்எஸ்எஸ் கும்பலை சேர்ந்தவர்கள் பரப்பிய வதந்திக்காக பீகாரில் இருந்து தமிழ்நாட்டிற்கு குழு அனுப்பி வைப்பது எந்த வகையில் நியாயம்?

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வடமாநிலத்தவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தி தமிழ்நாட்டில் படித்து விட்டு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் அரசியல் இயக்கங்களும் கூறி வருகிறது.  தவிர வட மாநிலத்திற்கு அவர்களை ஒட்டுமொத்தமாக வெளியேற்ற வேண்டும் என்று சொல்லவில்லை.

 வட மாநிலத்தவர்களின் எண்ணிக்கையை தமிழ்நாட்டில் அதிகப்படுத்தி அதன் மூலம் பாஜக வர நினைக்கிறது.  இந்த சதி திட்டம் முழுமையாக நிறைவேறுகின்ற காலத்தில் தமிழ்நாட்டில் பெரும் கட்சிகளாக இருக்கும் திமுகவும் அதிமுகவும் காணாமல் போகும் என்று எச்சரிக்கிறார்.