கோயிலை புதுப்பிக்க லஞ்சம் வாங்கிய அதிகாரியை அரசு காப்பாறுகிறதா?
கோயிலை புதுப்பிக்க ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய இணை ஆணையரை தற்காலிக பணி நீக்கம் செய்யாமல் காப்பாற்றுவது யார்? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தஞ்சாவூர் அருகே அம்மாபேட்டை தீபாம்பாள்புரம் வள்ளியம்மைநாதர் கோயில் புதுப்பிக்கும் பணிக்கான ஒப்பந்ததாரரிடம் ரூ.1 லஞ்சம் வாங்கிய தஞ்சாவூர் மண்டல் இணை ஆணையர் ஜோதிலட்சுமி மற்றும் அவரது உதவியாளர் கிரிஜா ஆகியோரை கடந்த 2ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பொதுவாக அரசு ஊழியர் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடிபடும் (Anti-Corruption Law Actions) போது, 48 மணி நேரம் வரை காத்திருக்காமல் கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள்ளேயே அரசு நிர்வாகம் உடனடியாக சஸ்பெண்ட் உத்தரவை பிறப்பிக்க முடியும்.
அதேபோன்று குற்றவியல் வழக்கிலோ அல்லது வேறு ஏதேனும் வழக்கிலோ ஒரு அரசு ஊழியர் 48 மணி நேரத்தைத் தாண்டி சிறையில் அடைக்கப்பட்டிருந்தால், அவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டதாகவே (Deemed Suspension) கருதப்படுவார் என்று அரசு விதிகள் கூறுகிறது. ஆனால் இதுவரை அவர் தற்காலிகபணி நீக்கம் செய்யப்பட்டதற்கான உத்தரவை அரசு பிறப்பிக்காமல் காலம் தாழ்த்துகிறது. அவரை யார் காப்பாற்றுவது என்பது புரியாத புதிராக உள்ளதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

