"எல்லாம் ஒப்பந்த பணிகள் தான் என சொல்ல வருகிறதா தவெக அரசு?" – கனிமொழி எம்.பி ஆவேச கேள்வி!

 
kanimozhi

தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது :-

தமிழ்நாட்டில் தற்காலிகப் பணியில் இருப்பவர்களின் பணிகளை நிரந்தரமாக்குவோம் என மோசடியாகத் தேர்தல் வாக்குறுதியளித்து ஏமாற்றிய தவெக அரசு, போராடும் ஒப்பந்த ஊழியர்களையும் ஒடுக்கி வருகிறது. இந்நிலையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வழியாக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஒப்பந்த முறையில் ஆட்களை நியமிக்க அறிவிப்பை வெளியிட்டிருப்பதன் மூலம், இனி நிரந்தர அரசுப் பணிகள் இல்லை, எல்லாம் ஒப்பந்தப் பணிகள்தான் எனச் சொல்ல வருகிறதா தவெக அரசு?

இந்த அரசு ஏற்கனவே அரசுப் போட்டித் தேர்வுகளில் குறைந்த பணியிடங்களையே ஒதுக்கிவரும் சூழலில், ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்க முயற்சிப்பது லட்சக்கணக்கான இளைஞர்களின் அரசு வேலைக் கனவைச் சிதைக்கும் நடவடிக்கையாகும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.