சென்னையில் ஐஎஸ் பயங்கரவாத தலைவர் கைது

 
NIA

வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சென்னையில் கைது செய்யப்பட்டார். 

பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டம்; ஐஎஸ் பயங்கரவாத தலைவர் சென்னையில் கைது -  NIA அதிரடி! - தமிழ்நாடு

திருச்சூர் அடிப்படையிலான ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவரை சென்னையில் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். தமிழ்நாடு, கர்நாடகா பகுதிகளில் மாறி, மாறி தலைமறைவாக இருந்து வந்த ஐஎஸ் தலைவர் சையது நபில் அகமது இன்று கைது செய்யப்பட்டார். போலி ஆவணங்கள் மூலமாக நேபாள நாட்டிற்கு தப்பி செல்ல முயன்றபோது சையது நபிலை என்.ஐ.ஏ. அதிகாரிகள் மடக்கி பிடித்தனர்.

கைதான ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சையது நபிலிடம் இருந்து முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டுவது, பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏற்கெனவே ஈரோடு வனப்பகுதியில் தலைமறைவாக இருந்த ஆசிஃப் என்பவரையும் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.