ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்த்தவர் சென்னையில் கைது!

 
IS Group

ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்த்தவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். 

தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  சென்னை மற்றும் மயிலாடுதுறையில் 20 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். IS தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனையானது நடைபெற்றது. 

இந்த நிலையில், ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்த்தவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். இளைஞர்களை மூளைச்சலவை செய்து ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்த்த முக்கிய நபர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். வாட்ஸ் அப், டெலிகிராம், சிக்னல் போன்ற செயலிகள் மூலம் இளைஞர்களை ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்க்க மூளைச்சலவை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.