டாஸ்மாக் மூடல் கண்துடைப்பா?- அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை
Jun 3, 2026, 14:21 IST1780476662794
சென்னை தலைமைச் செயலகத்தில் மதுவிலக்கு அமைச்சர் விக்னேஷ் மற்றும்அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார்.

டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை ஆலோசனை மேற்கொண்டார். 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டிருந்த நிலையில், அந்த நடவடிக்கைகளின் தற்போதைய நிலை குறித்து அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டறிந்தார். 717 கடைகள் மூடப்படும் என உத்தரவிட்டும், தற்போது வரை முழுமையாக மூடப்படாமல் இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். மேலும் பல்வேறு இடங்களில் ஒரே ஒரு நாள் மூடிவிட்டு மீண்டும் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்கும் விவகாரத்திலும் குழப்பம் நீடித்து வரும் நிலையில் இந்த ஆலோசனை நடைபெறுகிறது.

