மதுவை டோர் டெலிவரி செய்ய திட்டமா?- டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம்

 
tasmac

ஆன்லைன் மூலம் மது விற்பனை என தகவல் வெளியான நிலையில் மறுப்பு தெரிவித்தது டாஸ்மாக் நிறுவனம்.

tasmac

தமிழ்நாட்டில்  பீர், ஒயின், மணமூட்டப்பட்ட மதுவகைகள் போன்ற குறைந்த அளவில் ஆல்கஹால் கொண்ட மதுவகைகளை  சொமாட்டோ, ஸ்விக்கி, பிக்பேஸ்கட் போன்ற ஆன்லைன் வினியோக நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே கொண்டு சென்று விற்க தமிழக அரசு  திட்டமிட்டிருப்பதாகவும், அதன் சாதக பாதகங்கள் குறித்து ஆன்லைன் வினியோக நிறுவனங்கள், மது உற்பத்தியாளர்கள் போன்றோருடன் கலந்தாய்வு செய்து வருவதாகவும்  தி எகனாமிக் டைம்ஸ் நாளிதழ்  செய்தி வெளியிட்டு இருந்தது.

இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், உணவு ஆஃப்கள் மூலம் மது விற்பனை செய்யவிருப்பதாக கூறப்படும் தகவலில் உண்மையில்லை என டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதேபோல் டெட்ரா பாக்கெட்  எனப்படும் காகித குடுவையில் மதுபானங்களை அறிமுகம் செய்யவும் திட்டமிடவில்லை என டாஸ்மாக் நிர்வாகம் கூறியுள்ளது.