#BREAKING தனியார் மயமாகிறது டாஸ்மாக்? நடுத்தெருவுக்கு வரும் 24,000 ஊழியர்கள்?

 
ச்

கொள்முதலை டாஸ்மாக் மூலம் நடத்தி, சில்லறை விற்பனை மற்றும் பார்களை மட்டும் தனியார்மயமாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

Tamil Nadu CM C Joseph Vijay Orders Closure of 717 TASMAC Liquor Shops Near  Schools, Temples and Bus Stands for Public Welfare

தமிழ்நாட்டில் டாஸ்மாக் விவகாரம் தொடர்ந்து விஸ்வரூபம் எடுக்கிறது. அரசுக்கு எதிரான கருத்துணர்வை வலுவாக்கிறது. தமிழகத்தில் இன்றைய தேதியில் 3638 டாஸ்மாக் கடைகள் இயங்கிவருகின்றன. இதில் 23 ஆயிரத்து 980 பேர் பணிபுரிகின்றனர். டாஸ்மாக் மூலம் ஆண்டு வருவாய் சுமார் ரூ.48 ஆயிரம் கோடி கிடைக்கிறது. இந்த டாஸ்மாக்கை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு தீவிர ஆலோசனை மேற்கொண்டுவருகிறது.

மேலும் கொள்முதலை டாஸ்மாக் மூலம் நடத்தி, சில்லறை விற்பனை மற்றும் பார்களை மட்டும் தனியார்மயமாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஏலத்தால் அதிக வருவாய் கிடைப்பதுடன், பணியாளர் பிரச்சனையும் கையாள வேண்டாம் என்பது அரசின் கருத்து. 2 வாரங்களில் 717 மதுக்கடைகளை மூடுவதாக தவெக அறிவித்தாலும், இதுவரை 512 கடைகள் மட்டுமே மூடப்பட்டுள்ளன. இதனிடையே தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகளை மூட CM விஜய் உத்தரவிட்டிருந்தார். டாஸ்மாக் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மூடப்பட்ட கடைகளின் விவரங்கள் நாளை வெளியிடப்படும் என அமைச்சர் விக்னேஷ் அறிவித்துள்ளார்.