ஜெம் வீரமணி வழக்கில் ரத்தீஷ்க்கு தொடர்பு?
ஜெம் வீரமணி வழக்கில் SRMU தலைவர் கண்ணையாவின் மகன் பிரகாஷ்க்கு எதிராக LOOK OUT நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

10-க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி உட்பட 3 பேரை போலீசார் ஏற்கெனவே கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஜெம் வீரமணி மீது வழக்கு பதிவு செய்து சம்மன் அனுப்பியுள்ள நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரான பிரகாஷ் என்பவருக்கும் பாலியல் தொழில் தடுப்பு பிரிவு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. சம்மன் வழங்க பிரகாஷை போலீஸ் தேடி சென்ற நிலையில், அவர் தற்போது வெளிநாட்டில் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். விசாரணையில் தனது பெயர் சிறுமிகள் பாலியல் வழக்கில் (எஃப்ஐஆர்) சிக்காமல் இருக்க வீரமணி, காவல் துறை உயரதிகாரிகளுக்கும் முக்கிய அரசியல் கட்சியினருக்கும் ரூ. 70 கோடி மதிப்பிலான பணத்தை செட்டில் செய்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் உதயநிதி உடன் மிகவும் நெருக்கமாய் இருந்த ரத்தீஷ்ராஜ் மூலம் ஜெம் கிரானைட்ஸ் அதிபர் R.வீரமணி போக்சோ வழக்கில் கைது செய்யாமல் இருக்க ரூ.70கோடி ரூபாய் பணபரிமாற்றம் நிகழ்ந்ததாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. ரத்தீஷ்வ் தமிழ்நாட்டில் டாஸ்மாக் (TASMAC) முறைகேடு மற்றும் அரசியல் விவகாரங்களில் சர்ச்சைக்குள்ளான ஒரு தொழிலதிபராவார். SRMU கண்ணையா மகன் பிரகாஷ் ரத்தீஷ் ராஜ் உடன் கைதுக்கு மருந்து வெளிநாட்டில் தலைமறைவாய் இருக்கிறார். இதனிடையே ஜெம் வீரமணி வழக்கில் SRMU தலைவர் கண்ணையாவின் மகன் பிரகாஷ்க்கு எதிராக LOOK OUT நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கைதுக்கு பயந்து பிரகாஷ் வெளிநாட்டில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்தியாவில் எந்த விமான நிலையத்தில் வந்து இறங்கினாலும் விமான நிலையத்திலேயே கைது செய்யும் வகையில் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

