நித்தியானந்தா மரணம்? - வீடியோவால் பரபரப்பு

பிரபல சாமியார் நித்தியானந்தா கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இறந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கைலாசாவில் வசித்துவருவதாக சொல்லப்படும் பிரபல சாமியார் நித்தியானந்தா கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இறந்து விட்டதாக நித்தியானந்தா சகோதரி மகன் சுந்தரேஸ்வரன் வீடியோ மூலமாக ஆன்மீக சொற்பொழிவில் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. வழக்குகளில் இருந்து தப்பிக்கவே நித்தியானந்தா மரணம் செய்தி பரப்பப்படுகிறதா? அல்லது உண்மையில் நித்தியானந்தா மரணமடைந்தாரா? என சந்தேகம் எழுந்துள்ளது. நித்தியானந்தாவின் பல்லாயிரம் கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி நடைபெறுகிறதா? என்றும் பக்தர்கள் குழப்பமடைந்துள்ளனர். இந்து தர்மத்தை காப்பதற்காக நித்தியானந்தா உயிர் தியாகம் செய்ததாகவும் சுந்தரேஸ்வரன் வீடியோ பிரசங்கத்தில் கூறியுள்ளார். ஆனால் இந்த தகவல்கள் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.
தமிழ்நாட்டில் திருவண்ணாமலையில் பிறந்து வளர்ந்த நித்தியானந்தா கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் அமைத்து புகழ்பெற்றார். அவர் தற்போது ஈக்வடார் அருகே ஒரு சிறிய தீவில் கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி இருக்கிறார் என்று அவரே அறிவித்தார் என்பது குறிப்பிடதக்கது.