தவெகவில் இருந்து வெளியேறுகிறாரா நாஞ்சில் சம்பத்?

 
நாஞ்சில் சம்பத் விஜய்

என்னுடைய வெளிச்சத்தை யாரும் அணைக்க முடியாது, என்னுடைய காற்றை யாரும் வழிமறிக்க முடியாது என நாஞ்சில் சம்பத் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.


தொடக்கத்தில் திமுகவில் (DMK) தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய நாஞ்சில் சம்பத், பின்னர் வைகோவுடன் இணைந்து மதிமுகவின் (MDMK) கொள்கை பரப்புச் செயலாளராக நீண்ட காலம் தீவிரமாகப் பணியாற்றினார். 2012-இல் அதிமுகவில் (AIADMK) இணைந்த இவருக்கு, ஜெயலலிதாவால் கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அமமுக மற்றும் திமுக ஆதரவு: ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு டி.டி.வி. தினகரனின் அமமுகவில் சில காலம் பயணித்தார். அதன்பின் சில ஆண்டுகள் தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தாலும், திமுக கூட்டணிக்காகத் தேர்தல் மேடைகளில் பரப்புரை மேற்கொண்டார். 2025 டிசம்பரில் நடிகர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் (TVK) அதிகாரப்பூர்வமாக இணைந்தார். தற்போது அக்கட்சியின் பரப்புரைச் செயலாளராக (Campaign Secretary) நியமிக்கப்பட்டு, தீவிரமாகப் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நாஞ்சில் சம்பத் தனது எக்ஸ் தளத்தில், “போனால் போகட்டும் போடா.. 
இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா..
என்னுடைய பகலை யவரும் இருட்டாக்க முடியாது..
என்னுடைய வெளிச்சத்தை யாரும் அணைக்க முடியாது..
என்னுடைய காற்றை யாரும் வழிமறிக்க முடியாது..” எனக் குறிப்பிட்டுள்ளார். நாஞ்சில் சம்பத்தின் இந்த பதிவு வைரலாகிவரும் நிலையில், அவர் தவெகவிலிருந்து விலகவிருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.