நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள் வேறு கட்சியில் இணைகிறாரா ..?
மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசிய காளியம்மாள், “மொழி அழிந்தால், இனம் அழியும் என்று சீமான் கூறியுள்ள கருத்து ஒவ்வொருவரும் ஏற்றுக் கொள்ள வேண்டியது. எனக்கு மொழி சார்ந்த புரிதலை ஏற்படுத்தியவர் சீமான். சரியான கருத்தை யார் சொன்னாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும். என்னுடைய அரசியல் பயணம் மக்களுடன் சேர்ந்து இருக்கும். சட்டமன்றத் தேர்தலில் நிச்சயமாக போட்டியிட்டு மக்களுக்கான உரிமைகளை பெற்று தருவேன், மக்களின் பிரதிநிதியாக நிற்பேன். எப்படி எந்த சூழலில் என்பது வரும் காலத்தில் புரியும்.
புதிய கட்சி ஆரம்பிப்பதா? அல்லது ஒரு கட்சியில் இணைவதா? என்பது குறித்த முடிவை ஒரிரு நாளில் அறிவிப்பேன். ஒரு கட்சியை நோக்கி ஒருவர் செல்வது அவரது தனிப்பட்ட முடிவு, தனிப்பட்ட தேர்வு, அதற்குப் பிறகு அவர்கள் மக்கள் பணியில் என்ன செய்கிறார்கள் என்பது தான் முக்கியம். தவிர ஏன் அந்த அமைப்பிற்கு போனார்கள்? என்பது கேள்விக்குரியது அல்ல. நாம் தமிழர் கட்சியை விட்டு விலகி ஓராண்டு ஆகியுள்ளது. அதற்கான விடை அவரே கூறி இருப்பதாக நான் நம்புகிறேன்” என்றார்.


