முறைகேடு வழக்கில் சிறைக்கு சென்றவரை உறுதியானவர் என பாராட்டுவதா? - தமிழிசை சாடல்
‘முறைகேடு வழக்கில் கைதான செந்தில் பாலாஜியை உறுதியானவர் என்று முதல்வர் பாராட்டுவது வேடிக்கை” என்று பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “*செந்தில் பாலாஜி மீது வழக்கு போட்டது தற்போதைய முதல்வர், எதிர்க்கட்சியில் இருக்கும் பொழுது துரோகி தன் கட்சிக்கு வந்தவுடன் தியாகியா ?
* சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டா சிறை சென்றார், தியாகி என்று கூறுவதற்கு?
*INDI... கூட்டணி இந்த ஜாமீனை கொண்டாடுகிறது இது ஜாமீன் தானே தவிர விடுதலை அல்ல
*காவல் நிலையம் சென்று கையெழுத்திட வேண்டுமென்று வழக்காடு மன்றம் சொன்னவரை மந்திரி ஆக்கி கையெழுத்து இட வைக்கலாமா? என சிந்திக்கிறது திமுக
* முறைகேடு செய்வதில் உறுதியாக இருந்தவரை சிறையில் உறுதியாக இருந்தார் என்று பாராட்டுகிறார் முதல்வர்
* 471 நாட்கள் சிறையில் வைத்திருந்தது பலமுறை வழக்காடு மன்றத்தினால் ஜாமீன் மறுக்கப்பட்டதனால்,
மத்திய அரசினால் அல்ல
* எமர்ஜென்சி காலத்தில் கூட இந்த அடக்குமுறை இல்லை என முதல்வர் சொல்கிறார் எமர்ஜென்சி அடக்குமுறை கொண்டு வந்தவரோடு கூட்டணியில் இருந்து கொண்டு, ஆக ஒட்டுமொத்தமாக முறைகேடு வழக்கில் கைதான வரை உறுதியானவர் என்றும் பாராட்டுவது வேடிக்கை..’இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.