'நடப்பது த.வெ.க., ஆட்சியா அல்லது தி.மு.க., ஆட்சியா'..?? சீமான் கேள்வி..!!
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையைச் சேர்ந்த செய்தியாளரும், நா.த.க.,வின் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பாசறை செயலருமான ஹாஜா முகைதீன், அவரது வீட்டின் வாசலிலேயே போதை கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார்.
போதைப்பொருட்களின் விற்பனைக்கு எதிராக நிற்கும் ஒரு செய்தியாளருக்கே, இவ்வளவு பெரிய அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, வன்முறை தாக்குதல் தொடுக்கப்படுகிறது. அப்படியென்றால், எளிய மக்களின் நிலை என்னவாக இருக்கும். நாள்தோறும் போதை கும்பலின் அட்டூழியமும், பெண்களுக்கு எதிரான தாக்குதல்களும், வன்முறை வெறியாட்டங்களும் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
தி.மு.க., ஆட்சியில் நிகழ்ந்த கொடுமைகள் தான் தொடரும் என்றால், நடப்பது த.வெ.க., ஆட்சியா இல்லை தி.மு.க., ஆட்சியா; இதுதான் மாற்று அரசியலா? முதல்வராக பதவி ஏற்றதும், 'போதைப்பொருள் தடுப்புக்கான சிறப்பு அதிரடிப்படை அமைப்பு' என்று கையெழுத்திட்டாரே விஜய், அந்த படை என்ன செய்கிறது?
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

