இப்படியொரு வேலையா? தினமும் 6 மணி நேரம் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்த்தால் உங்களுக்கு வேலை..!
Monk-E நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான விராஜ் சேத், லிங்குடின் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதில் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்பவர்கள் எப்பொழுதும் யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றில் வீடியோ ஸ்கிராலிங் செய்து கொண்டிருப்பவர்களாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
மும்பை சேர்ந்த monk e நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு ஆட்களை தேர்வு செய்வதாக அறிவித்திருக்கிறது இவ்வாறு வரக்கூடிய ஊழியர்களின் தகுதியின் ஒரு நாளைக்கு ஆறு மணி நேரத்திற்கு மேல் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமை பயன்படுத்துபவராக இருக்க வேண்டும் என தெரிவித்திருப்பது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது.
சமூக வலைதளங்களில் வீடியோ ஸ்கிரால் செய்து பார்ப்பவர்களை ஆங்கிலத்தில் doom scrollers என அழைக்கின்றனர். அந்த வகையில் தங்கள் நிறுவனத்தில் doom scrollersகளே வேலைக்கு தேவை என அவர் பதிவு செய்திருக்கிறார். வழக்கமாக பிரவுசிங் செய்து விஷயங்களை தெரிந்து கொள்பவராக இல்லாமல் ஒரு நாளைக்கு ஆறு மணி நேரத்திற்கு மேல் இன்ஸ்டாகிராம், யூடியூப்-இல் ஸ்கிராலிங் செய்பவராக இருக்க வேண்டும் அதற்கு ஆதாரமாக ஸ்கிரீன் ஷாட் களையும் பகிர வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.
இந்த வேலைக்கு மின்னஞ்சல் அனுப்புபவர்கள் சாட் ஜிபிடி பயன்படுத்தாமல் தங்களை பற்றிய சுய விவர குறிப்புகளை அனுப்ப வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த நிறுவனம் இன்ஃப்ளூயன்சர் மார்க்கெட்டிங்கில் ஈடுபடுவதால் இப்படி ஒரு வேலைவாய்ப்பை வழங்குகிறது. விராஜ் சேத்தின் இந்த பதிவு பலரது கவனத்தையும் பெற்று இருக்கிறது. பலரும் போனில் வீடியோ பார்ப்பதெல்லாம் வெட்டி வேலை என இருந்த காலம் போய் தற்போது அதுவே ஒரு வேலைவாய்ப்பாக வந்துள்ளது என கருத்து தெரிவித்துள்ளனர். மற்றொரு நபர் இனி என் அம்மா என்னை போன் பார்ப்பதற்காக திட்டினால் நான் வேலை தான் செய்கிறேன் என்று சொல்லி விடுவேன் என கூறியுள்ளார். இந்த வேலை வாய்ப்புக்கான அறிவிப்பு இளைஞர்களை கவர்ந்து வருகிறது.


