உணர்வுகளை மதிக்காத இடத்தில் உண்மையான பயணம் சாத்தியமா..?
Jun 16, 2026, 14:35 IST1781600733046
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சித்து தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பான அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
தலைமை என்பது அதிகாரமோ, ஆணவமோ அல்ல…
‘அர்ப்பணிப்பு மிகுந்த அரவணைப்பு’
உழைக்கும் தொண்டர்களின் மனதை வெல்ல முடியாத தலைமை, மக்களின் மனதை எப்படி வெல்லும்?
உணர்வுகளை மதிக்காத இடத்தில் உண்மையான பயணம் சாத்தியமா..?
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

