இப்படி ஒரு விபத்துக்கு அப்புறம் உயிரோட எந்திருக்கிறது சாத்தியமா..? – இணையத்தை அதிர வைக்கும் சிசிடிவி காட்சி!
ராஜஸ்தான் மாநிலம் சீகர் மாவட்டத்தில் உள்ள ரீங்கஸ் - காடூ ஷ்யாம் (Ringas-Khatu Shyam) பிரதான சாலையில் நொடிக் இடைவெளியில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு இளைஞர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய விசித்திரச் சம்பவம் நடந்துள்ளது.
சம்பவத்தன்று, அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பெரிய வழிகாட்டிப் பலகையில் (Signboard) பலமாக மோதியது. மோதிய வேகத்தில் பைக்கை ஓட்டி வந்த இளைஞர் பைக் மற்றும் பலகையின் மீது மோதி, காற்றில் சுமார் 8 அடி உயரத்திற்குப் பறந்து தலைகீழாகக் குப்புற வந்து தரையில் விழுந்தார்.
இவ்வளவு பயங்கரமான விபத்தில் அந்த இளைஞருக்கு பலத்த காயமோ அல்லது உயிரிழப்போ ஏற்பட்டிருக்கும் என்று பார்த்தவர்கள் அஞ்சிய நிலையில், ஒரு அதிசய நிகழ்வாக அவர் தரையில் விழுந்த அடுத்த நொடியே எந்தக் காயமும் இன்றி சுதாரித்துத் தாமாகவே எழுந்து நின்று தனது இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்றுள்ளார்.
இந்த முழுச் சம்பவமும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல வைரலாகி வருகிறது.கண் இமைக்கும் நேரத்தில் சுழன்று விழுந்த இளைஞர், சற்றும் பதற்றமின்றி இயல்பாக எழுந்து நடந்தது இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
"கடவுளின் அருளால் மட்டுமே இவர் உயிர்தப்பியுள்ளார்", "அதிவேகம் எப்போதும் ஆபத்து" எனப் பலரும் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதேசமயம், காடூ ஷ்யாம் கோயில் பகுதிக்குச் செல்லும் இந்த ரீங்கஸ் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பயணிப்பதால், அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கட்டுப்படுத்தவும், சாலையை நான்கு வழிச் சாலையாக விரிவுபடுத்தவும் வேண்டும் என உள்ளூர் மக்களும் பக்தர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
#Rajasthan சிகார் சாலையில் அதிவேகமாக வந்து மின் கம்பத்தில் மோதி 8 அடி உயரத்திற்கு தூக்கி வீசப்பட்ட ஸ்ப்ளெண்டர் பைக் ஓட்டுநர், எவ்வித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பொறுப்பற்ற இந்த ஆபத்தான ஓட்டுதல் முறை தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. https://t.co/9UMRC6O7Zn
— M.M.NEWS உடனடி செய்திகள் (@rajtweets10) November 5, 2026

