இது தேவையா ? போட்டோவிற்கு ஆசைப்பட்டு குதிரையிடம் கடி வாங்கிய பெண்..!
![1](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/bb8db99d04bc63ffbba4b10d0dd24d1f.webp)
இந்த நிலையில் லண்டனின் வெஸ்ட் மின்ஸ்டர் பகுதியில் குதிரை படை காவலர்களின் அணிவகுப்பு நடந்துள்ளது. அப்போது அங்கு சென்றிருந்த பெண் சுற்றுலா பயணி ஒருவர் குதிரை முன்பு நின்று புகைப்படம் எடுத்துள்ளார். அப்போது அந்த சுற்றுலா பயணி புகைப்படம் எடுப்பதற்காக குதிரையை தொட்டுள்ளார்.
இதனால் ஆவேசம் அடைந்த அந்த குதிரை கிளர்ந்தெழுந்து அந்த பெண்ணை தாக்கி உள்ளது. இதனால் அந்தப்பெண் தடுமாறி கீழே விழுந்தார். அவருக்கு அங்கிருந்த சிலர் உதவி செய்தனர். அந்த குதிரையில் அமர்ந்திருந்த வீரர் கருமமே கண்ணாயினராக அசையாமல் அமர்ந்திருந்தார். பின்னர் குதிரை படை வீரர் அந்த குதிரையை சாந்தப்படுத்தி உள்ளார்.
இதுதொடர்பான காட்சிகள் எக்ஸ் தளத்தில் வைரலாகி 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்தது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும், சில படங்களை மரியாதையுடன் எடுங்கள் என பதிவிட்டனர்.
I know I shouldn’t laugh 😂 pic.twitter.com/tcqKNFZs6P
— Darren Grimes (@darrengrimes_) May 21, 2024
I know I shouldn’t laugh 😂 pic.twitter.com/tcqKNFZs6P
— Darren Grimes (@darrengrimes_) May 21, 2024