முதல்வராக ஆசைப்படும் விஜய் பிரசாரத்தை புறப்பணிப்பது நியாயமா?
நாளை நெல்லை செல்லும் விஜய், ஏப்ரல் 9, 10, 11 முதல் ஏப்ரல் 21 வரை எங்கே பிரசாரம் செய்யப் போகிறார் என்ற தகவல் இல்லை.
2026 சட்டமன்றத் தேர்தலின் முதல்வர் வேட்பாளர்களின் ஒருவர் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய். திமுகவுக்கும் தவெகவுக்கும் போட்டி என பேசும்போதெல்லாம் சொல்கிறார் விஜய். ஆனால் திமுக தரப்பில், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி உட்பட கூட்டணிக் கட்சித் தலைவர்களும் ஒருநாளைக்கு இரண்டு மூன்று தொகுதிகளில் பிரசாரம் செய்கிறார்கள். எதிர்தரப்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தினசரி பிரசாரம் மேற்கொள்கிறார், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் சீமான் 100 தொகுதிகளை கடந்திருக்கிறார். அடுத்த 14 நாட்களுக்காக அவர்களது பட்டியலும் வெளியாகியிருக்கிறது.
இச்சூழலில், தவெக தலைவர் விஜய்யின் பிரசாரப் பயண விபரம் எங்கே..? நாளை நெல்லை செல்லும் விஜய், ஏப்ரல் 9, 10, 11 முதல் ஏப்ரல் 21 வரை எங்கே பிரசாரம் செய்யப் போகிறார். விஜய் பிரசாரத்துக்கு வருவாரா.. மாட்டாரா.. என எந்த தகவலும் எந்தவொரு மாவட்டச் செயலாளருக்கும் தெரியவில்லை. குறிப்பாக, கட்சி முன்னணி நிர்வாகிகளுக்கே 9, 10, 11 ஆகிய தேதிகளின் எங்கே இருப்பார். எங்கே பிரசாரம் செய்வார் எனத் தெரியவில்லை. முதல்வராக ஆசைப்படும் விஜய், பிரசாரத்துக்கு வருவதற்கு இவ்வளவு யோசிப்பதும், பயணத் திட்டத்தை வெளியிடாமல் இருப்பது அக்கட்சியினர் மத்தியில் பல்வேறு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 'காவல்துறை அனுமதி தரவில்லையே!' என கேட்கும் தவெகவினருக்கு ஒரு கேள்வி! ஏப்ரல் 9, 10, 11 முதல் ஏப்ரல் 21 வரை எந்தெந்த மாவட்டங்களில் அனுமதி கேட்டப்பட்டு அது நிராகரிப்பட்டது? நிதர்சனத்தில் எங்கும் அனுமதியே கோரியதாக தெரியவில்லை. ஒரு வேலை எதிர்பார்த்த அளவு வெற்றிக்கு வாய்ப்பில்லை என தெரிந்தே பிரச்சாரத்தை புறக்கணிக்கிறாரா என்பதும் கேள்விக்குறியே



