ஆண்டாள் வேடமா? அரசியல் வேடமா? - தமிழச்சி தங்கபாண்டியனுக்கு ஹிந்து மக்கள் கட்சி கண்டனம்..!!
Dec 18, 2025, 09:01 IST1766028662251
ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கை: சனாதன ஹிந்து தர்மத்தை ஒழிப்போம், சனாதனம் என்பது, கொசு, டெங்கு, மலேரியா போன்றது, என்றெல்லாம் பேசி, ஹிந்துக்களுக்கு எதிராக செயல்படும், தி.மு.க., - எம்.பி., தமிழச்சி, தன்னை ஆண்டாள் கோலத்தில் அலங்கரித்து, 'இன்ஸ்டாகிராமில்' படம் வெளியிட்டு, விளம்பரம் தேடிக் கொண்டிருக்கிறார்.


