அம்மை வார்த்தவர்கள் தங்கும் மண்டபமா?- எதிர்ப்புகளுக்கு பின் தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை

 
ச்

அம்மை வார்த்தவர்கள் தங்கும் மண்டபம்" என்று நேற்று முன்தினம் தமிழக அரசு சார்பில் வெளிவந்த செய்தியை - இன்று பல தரபட்ட எதிர்ப்புகளுக்கு பிறகு "அம்மை வார்த்தவர்கள் குணமான பிறகு தங்கும் மண்டபம்" என மாற்றி தமிழக அரசு மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

Image

திருச்சி- திருவரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி கோயிலின் உபகோயிலான அன்பில் அருள்மிகு மாரியம்மன் கோயிலில் அம்மை வந்தவர்கள் தங்க ரூ.1.50 கோடியில் தங்கும் மண்டபம் அமைக்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இதற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்த நிலையில், அன்பில் மாரியம்மன் கோயிலில் அம்மை வார்த்தவர்கள் குணமான பிறகு, அவர்களின் பிரார்த்தனை, நேர்த்திக்கடனுக்காக கோயிலில் தங்கி வழிபடுவதற்காக மண்டபம் வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அன்பில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் அம்மை வார்த்தவர்கள் குணமான பிறகு அவர்களின் பிரார்த்தனை மற்றும் நேர்த்திக்கடனுக்காக திருக்கோயிலில் தங்கி வழிபடுவதற்காக மண்டபம் வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அறிவிக்கப்பட்ட இந்த அறிவிப்பை சிலர் திட்டமிட்டு அம்மை வார்த்தவர்கள் மற்றவர்களுக்கு பரவும் வகையில் இங்கு தங்குவதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என தவறாக சித்தரித்து உண்மைக்கு புறம்பாக பரப்புகிறார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.” எனக் குறிப்பிட்டுள்ளது.