எவரெஸ்ட் பனிப்பாறை உருகுவதற்கு மனிதர்களின் சிறுநீரும் காரணமா..?

 
1

எவரெஸ்ட் பேஸ் கேம்பில் மனிதர்களின் செயல்பாடுகள் கும்பு (Khumbu) பனிப்பாறை உருகுவதை வேகப்படுத்துவதாக புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.
சமையல், வெப்பம் மற்றும் மின்சாரத்திற்குப் பயன்படுத்தப்படும் எரிபொருட்களால் வெளியாகும் வெப்பமும் இதற்கு பங்களிக்கிறது.மனிதர்களின் சிறுநீர் வெளியேற்றத்தால் உருவாகும் வெப்பத்தையும் ஆய்வாளர்கள் கணக்கில் எடுத்துள்ளனர்.2023-ல் வெளியான இந்த வெப்பம் ஆண்டுக்கு சுமார் 2,492 டன் பனி மற்றும் பனிச்சரிவை உருகச் செய்யக்கூடியது என ஆய்வு கணித்துள்ளது.1991-2023 செயற்கைக்கோள் தரவுகளின்படி, எவரெஸ்ட் பேஸ் கேம்பின் மேற்பரப்பு வெப்பநிலை ஆண்டுக்கு 0.28°C அதிகரித்துள்ளது.


நேபாளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பனிப் பாறைகள் உருகியதன் காரணமாக வரலாறு காணாத பெரு வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கி 1,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 4,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போய் உள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வரும் நிலையில், பனிப் பாறைகள் உருகுவதற்கு மனித சிறுநீரும் ஒரு முக்கிய காரணம் என ஆய்வில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

மனித சிறுநீரும் ஒரு காரணம்:

மலையேற்ற வீரர்களும், வழிகாட்டும் நபர்களும் எவரெஸ்ட் அடிவார முகாம்களில் தான் தங்குகின்றனர். இவர்கள் தினந்தோறும் சுமார் 6,000 லிட்டர் சிறுநீரை பனியில் கழிக்கின்றனர். இதன் காரணமாக ஒவ்வொரு சீசனிலும் 154 டன் பனிப் பாறைகள் உருகுவதாக நேபாளம் மற்றும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பனிப்பாறைகள் உருகுவதற்கு புவி வெப்பமயமாதல் ஒரு முக்கிய காரணமாக சொல்லப்பட்டு வரும் நிலையில், மனித சிறுநீரும் ஒரு காரணம் என்பது தெரிய வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பூமியின் வெப்பம் இன்னும் சில ஆண்டுகளில் 1.5 டிகிரி செல்சியஸ் வரை உயரக் கூடும் என ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் புவியின் வெப்பநிலை உச்சபட்ச நிலையை எட்டும். கடந்த 50 ஆண்டுகளில் காடுகள் அழிப்பு மற்றும் தொழில் வளர்ச்சியால் ஏற்பட்ட மாற்றங்கள் உள்ளிட்ட காரணங்களால் புவியில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஏற்கனவே அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை சூப்பர் எல்-நினோவின் தாக்கம் அதிகரிக்கும் என உலக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது ஐநாவும் எச்சரிக்கை எடுத்திருப்பது கவலையை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் கடுமையான வறட்சியும், சில நாடுகளில் வரலாறு காணாத வெள்ளமும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


புவி வெப்பமயமாதலின் காரணமாக பனிப்பாறைகள் உருகுவது மேலும் தொடர்ந்தால், நேபாள் பெருவெள்ளம் போல் இந்த உலகம் மேலும் பல வெள்ளங்களை சந்திக்க வேண்டியிருக்கும். இதன் காரணமாக தற்போது புவியின் வெப்பநிலையை உயராமல் பார்த்துக் கொள்ள வேண்டியதே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருக்கும் என ஐநா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு உலக நாடுகிளின் பங்களிப்பும், பொதுமக்களின் பங்களிப்பும் மிகவும் அவசியம்.


பருவகால மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை மனித இனம் எதிர்கொள்ள வேண்டிய சூழலில் தத்தளிக்கிறது. இதிலிருந்து மீண்டு வர வேண்டுமாயின் சுற்றுச்சூழல் மாசுபடுவதைக் கட்டுப்படுத்தி, இயற்கை வளங்களை பேணிப் பாதுகாக்க வேண்டியது அவசியம்.