திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளர் இவரா..? - ‘Hint’ கொடுத்த முதல்வர் விஜய்..!!
தமிழக முதலமைச்சர் ஜோசேப் விஜய் மற்றும் தவெக அமைச்சர்கள் திருச்சிக்கு வருகை தந்து நன்றி அறிவிப்பு கூட்டத்தில் கலந்து கொண்டார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும் சென்னை பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார் விஜய். இரு தொகுதிகளிலும் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அவர், பின்பு திருச்சி கிழக்கு தொகுதியில் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதையடுத்து அங்கு இடைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், “வரப்போகும் இடைத்தேர்தலில் உங்கள் வீட்டில் இருந்து வரும் ஒருவரைத்தான் நிற்க வைப்பேன், அவரை வெற்றி பெற செய்யுங்கள்” என குறிப்பிட்டிருந்தார்.
திருச்சி கிழக்கு தொகுதி மக்களின் அன்பை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். ராஜினாமா செய்தாலும் இந்தத் தொகுதியை நான் கைவிடப் போவதில்லை. உங்களுக்குச் சேவை செய்ய, உங்கள் மண்ணின் மைந்தன் ஒருவரே தவெக சார்பில் வேட்பாளராகக் களமிறங்குவார் என்று அதிரடியாக அறிவித்தார்.விஜய்யின் இந்த மண்ணின் மைந்தன் அறிவிப்புக்கு பின்பு முன்னாள் அமைச்சரும், திருச்சி அரசியலின் மூத்த தலைவருமான கு. பா. கிருஷ்ணனின் மகன் க. சிரஞ்சீவி முதல்வர் விஜய்யின் மேடையில் திடீர் அறிமுகம் செய்யப்பட்டார்.
அப்போது சிரஞ்சீவி , முதல்வர் விஜய்க்கு பிரம்மாண்டமான வெள்ளிக் கோல் ஒன்றை கௌரவமாக வழங்கினார். இந்த நிகழ்வு திருச்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி கிழக்கு தொகுதி மக்கள் மத்தியில் விஜய்க்கு நல்ல வரவேற்பு இருப்பதால், உள்ளூர் செல்வாக்கு மிக்க சிரஞ்சீவி போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு அதிகம் என தவெக தரப்பு நம்பிக்கை தெரிவிக்கிறது.

