"இதெல்லாம் ஒரு வழக்கா?" - 31 ஆண்டுகளுக்குப் பிறகு வேலை கேட்டவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த நீதிபதி!

 
court

காவல்துறையில் பணியாற்றிய தந்தை இறந்து 31 ஆண்டுகளுக்கு பிறகு, கருணை அடிப்படையில் தனக்கு வேலை வழங்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த 51 வயது நபருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

இது தேவையற்ற மற்றும் தொல்லை தரும் வழக்கு என்று குறிப்பிட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பின்னணி: மனுதாரரின் தந்தை ஹரியானா காவல்துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி, பிப்ரவரி 4, 1995 அன்று பணியின் போது உயிரிழந்தார். ஹரியானா காவல்துறையில் உதவி சார்பு ஆய்வாளர் (ASI) பதவிக்கு வயது மற்றும் உடல் தகுதி வரம்புகளில் தளர்வு அளித்து கருணை அடிப்படையில் வேலை வழங்கக் கோரி 51 வயதான அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

நீதிபதி நிதி குப்தா அடங்கிய அமர்வு, இந்த வழக்கை "தேவையற்ற மற்றும் தொல்லை தரும் வழக்கு" எனக் குறிப்பிட்டது. கருணை அடிப்படையிலான நியமனத்தின் நோக்கம், ஊழியர் இறந்த பிறகு குடும்பம் எதிர்கொள்ளும் உடனடி நிதி நெருக்கடிக்கு உதவுவதே தவிர, பல தசாப்தங்களுக்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தக்கூடிய உரிமை அல்ல என்று நீதிமன்றம் தெரிவித்தது.