கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் முறைகேடு! வெறும் ஜல்லி கற்கள் சாலைதான்

 
ச்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

Image
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இனாம்மணியாச்சி கிராமத்தில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் வெறும் ஜல்லிகற்கள் மட்டும் தான் சாலை. பல மாதங்களாகியும் சாலை பணி மேற்கொள்ளவில்லை. பலமுறை கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இந்த சாலைக்கான பில் தொகை செட்டில் செய்யப்பட்டு விட்டதால் சாலை பணியை அப்படியே முடித்து விட்டதாக கணக்குகாட்டியதாக தெரிகிறது இதனால் வெறும் ஜல்லியுடன்சாலை முடிக்காமல் கிடைத்தது வரை லாபம் என காண்ட்ராக்டர்களும் அப்படியே போட்டுவிட்டு சென்று விட்டனர். இதுபோல் பல இடங்களில் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டம் நிலைமை இப்படித்தான் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.