நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்கியதில் முறைகேடு - 5 அதிகாரிகள் சஸ்பெண்ட்

 
கலைஞர் நூற்றாண்டு நூலகத்

நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்கியதில் முறைகேடு நடைபெற்ற சம்பவத்தில்  5 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

1

கோவை மாவட்டம் காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு சமீபத்தில் பெரியார் அறிவுலக நூலகம் திறக்கப்பட்டது. இந்த நூலகத்தின் தமிழ் பிரிவில், போலியான ஆசிரியர் பெயர்களிலும், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மூலமாகவும் உருவாக்கப்பட்ட தரமற்ற புத்தகங்கள் மிக அதிக விலைக்குக் கொள்முதல் செய்யப்பட்டதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம்சாட்டியிருந்தார். இந்த புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சர்ச்சைக்குரிய பதிப்பகங்களின் சுமார் 1,800-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் நூலக அலமாரிகளில் இருந்து அகற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து, நூல் கொள்முதலில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்தக் கோரி தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை மற்றும் திமுக சட்டத்துறை சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறையில் தனித்தனியாகப் புகார்கள் அளிக்கப்பட்டன. இதுதொடர்பான விசாரணை நடைபெற்றுவரும் நிலையில்,  நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்கியதில் முறைகேடு நடைபெற்ற சம்பவத்தில்  5 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 


சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் 

காமாட்சி - சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் பொறுப்பு தலைமை நூலகர் மற்றும் தகவல் அலுவலர்; துணை தலைமை நூலகர் 

தினேஷ் குமார்  – மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் பொறுப்பு தலைமை நூலகர் மற்றும் தகவல் அலுவலர்

சந்தான கிருஷ்ணன் – மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் நூலகர் மற்றும் தகவல் அலுவலர்; பெரியார் நூலகத்தின் பொறுப்பு அலுவலர்

எஸ்.சந்தான கார்த்திகேயன்  – சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் நூலகர் மற்றும் தகவல் அலுவலர்

ஜே.ஜூலியட் – பொது நூலக இயக்குநரகத்தின் தலைமை கணக்கு அலுவலர்