நாட்டின் முக்கிய புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்ல IRCTC-ன் செம்ம பிளான்! மாதம் ரூ.646 இருந்தால் போதும்!
IRCTC தனது பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் மூலம் நாட்டின் முக்கிய புண்ணிய ஸ்தலங்களுக்கு மிகக் குறைந்த மாதாந்திர தவணை முறையில் பயணம் செய்யும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது..
இந்தத் திட்டத்தின் கீழ் முதல் சுற்றுலாத் தொகுப்பு 2026 ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 11 வரை என மொத்தம் 11 இரவுகள் மற்றும் 12 நாட்கள் கொண்ட பயணமாக அமையவுள்ளது. இந்த யாத்திரையில் திருப்பதி பாலாஜி கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், கன்னியாகுமரி மற்றும் மல்லிகார்ஜுனா ஜோதிர்லிங்கம் ஆகிய முக்கிய இடங்களுக்குப் பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுவர். இந்த டூர் பேக்கேஜின் ஆரம்பக் கட்டணம் ரூ.23,560 ஆகும். இதனைப் பயணிகள் மாதம் வெறும் ரூ.828 என்ற எளிய இஎம்ஐ தவணையிலும் செலுத்திக் கொள்ளலாம்.
அடுத்ததாக, இரண்டாவது சுற்றுலாத் தொகுப்பு 2026 ஆகஸ்ட் 17 முதல் ஆகஸ்ட் 26 வரை என 9 இரவுகள் மற்றும் 10 நாட்கள் கொண்ட பயணமாகத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த யாத்திரையில் மாகாளேஸ்வரர், ஓங்காரேஸ்வரர், நாகேஸ்வரர் மற்றும் சோமநாத் ஆகிய நான்கு ஜோதிர்லிங்கங்களுடன் துவாரகாதீஷ், பேட் துவாரகை, சிக்னேச்சர் பாலம் மற்றும் புகழ்பெற்ற ஒற்றுமையின் சிலை ஆகியவற்றைத் தரிசிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த பேக்கேஜின் ஆரம்ப விலை ரூ.18,380 ஆகும். இதைப் பயணிகள் மாதம் வெறும் ரூ.646 என்ற மிகக் குறைந்த இஎம்ஐ முறையில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
பயணிகளின் வசதிக்காக இந்த பாரத் கௌரவ் சுற்றுலா ரயிலில் ஏசி செகண்ட் கிளாஸ், ஏசி தேர்ட் கிளாஸ் மற்றும் ஸ்லீப்பர் கிளாஸ் ஆகிய மூன்று வகையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றுடன் எல்டிசி (LTC) மற்றும் இஎம்ஐ (EMI) போன்ற சலுகைகளும் பயணிகளுக்குக் கிடைக்கும். இந்த யாத்திரையில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.irctctourism.com மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்.

