போரை நிறுத்த 3 கண்டிஷன்கள் போட்ட ஈரான் அதிபர்..!!

 
Q

வாஷிங்டனில் புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், “ஈரானுடனான போரில் அமெரிக்கா வெற்றி பெற்றுவிட்டது. இனி தாக்கி அழிப்பதற்கு ஈரானில் இலக்குகள் எதுவும் இல்லை. எப்போது வேண்டுமானாலும் போரை நிறுத்துவேன்” என்று தெரிவித்திருந்தார்.

ஆனால், அமெரிக்காவுடனான போரை நிறுத்துவதற்கு 3 நிபந்தனைகளை ஈரான் அதிபர் விதித்துள்ளார்.

அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “ரஷியா மற்றும் பாகிஸ்தான் தலைவர்களுடன் நான் ஆலோசனை நடத்தினேன். மத்திய கிழக்கில் அமைதிக்கான எனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினேன்.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவால் தூண்டிவிடப்பட்ட இந்த போரை முடிவுக்குக் கொண்டுவர ஒரே வழி, ஈரானின் சட்டப்பூர்வமான உரிமைகளை அங்கீகரிப்பது, உரிய இழப்பீடுகளை வழங்குவது மற்றும் எதிர்காலத்தில் தாக்குதல் நடத்த மாட்டோம் என்ற உத்தரவாதங்களை வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.