மீண்டும் சர்வதேச விமான சேவை தொடங்கியது ஈரான்..!!

 
flight

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து, பிப்.28ம் தேதி முதல் ஈரான் மீது தாக்குதல்களை நடத்தின.

போர் தீவிரம் அடைந்ததால் ஈரான் வான்வழிப்பாதைகள் முழுவதும் முடங்கின. தற்போது போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், ஈரானுக்கும் உலக நாடுகளுக்கும் இடையேயான சர்வதேச விமான போக்குவரத்துக்கான நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன.

இந்நிலையில், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து வணிக ரீதியான விமான சேவைகள் இன்று முதல் தொடங்கப்பட்டு உள்ளன. இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இஸ்தான்புல், மஸ்கட் மற்றும் மதீனாவுக்கு விமானங்கள் புறப்பட்டுச் சென்றன.

இஸ்தான்புல்லுக்கு குறைந்தது 3 விமானங்கள் இயக்கப்பட்டன.முன்னதாக பதற்றமான சூழல் தொடர்வதால் இந்தியர்கள் யாரும் ஈரானுக்கு பயணிக்க வேண்டாம் என்று டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்து இருந்தது, குறிப்பிடத்தக்கது.