அதிர்ச்சியில் ஈரான்..!! கமேனியைத் தொடர்ந்து அவரது மனைவியும் உயிரிழப்பு..!

 
1

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தத் தாக்குதலில் ஈரான் மதத்தலைவரும், ஆட்சியாளருமான கமேனி மற்றும் அவரது மகள், மருமகன் மற்றும் பேத்தி ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இதற்கு ஈரான் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதற்கு பதிலடியாக அமெரிக்க படைதளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.


இந்நிலையில், இந்த தாக்குதலில் கமேனியின் மனைவியான மன்சவுரத் கோஜஸ்தே படுகாயம் அடைந்தார். கோமா நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்ததாக ஈரான் மீடியாக்கள் தெரிவித்து உள்ளன.