ஈரான் தாக்குதல்- ஓமனில் இந்தியர் பலி
ஓமனில் எண்ணெய் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தார்.

சர்வதேச சட்டங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் விதிமுறைகளுக்கு, எதிராக அமெரிக்க மற்றும் இஸ்ரேல் ராணுவம் ஈரான் மீது போர் தொடுத்துள்ளன. கடந்த 2026 பிப்ரவரி 28 அன்று, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி கொமேனி படுகொலை செய்யப்பட்டார்.
இதேபோல் இன்று நடந்த தாக்குதலில் ஈரான் புலனாய்வு அமைச்சகத்தின் உறுப்பினர்கள் இருவர் கொல்லப்பட்டனர். உளவு பிரிவு தலைவர் ஜலால் உசேன், புலனாய்வு துறை துணை அமைச்சர் சையது ஹமிதி ஆகியோரும் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஈரானின் ட்ரோன் படகு மூலம் ஓமனின் எண்ணெய் கப்பல் தகர்க்கப்பட்டுள்ளது. இதில் கப்பலின் எஞ்ஜின் அறையில் பணியாற்றிய இந்தியர் உயிரிழந்தார். 16 இந்தியர்கள் உட்பட 21 பேருடன் சென்ற எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் கொல்லப்பட்ட நிலையில், இடைக்கால பாதுகாப்பு அமைச்சராக சையது மஜித் ரஸா நியமிக்கப்பட்டுள்ளார்.

