ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிடமாற்றம்! வெளியான திடீர் அறிவிப்பு
Updated: Feb 24, 2025, 21:02 IST1740411164271

தமிழ்நாட்டில் பல்வேறு ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் மற்றும் பதவி உயர்வு அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 4 காவல்துறை அதிகாரிகள் காவல் கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு செய்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
- செங்குன்றம் துணை காவல் ஆணையராக பாலாஜியை இடமாற்றம் செய்து உத்தரவு
- ஞானசேகரன் வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவில் இடம் பெற்றிருந்த எஸ்பி பிருந்தா, தமிழ்நாடு சிறப்பு காவல்படை எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- திருப்பூர் தெற்கு துணை ஆணையராக தீபா சத்யன் இடமாற்றம்
- கோயம்பேடு காவல் துணை ஆணையராக கே.அதிவீரபாண்டியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- சேலம் வடக்கு துணை ஆணையராக இருந்த பிருந்தா தமிழ்நாடு சிறப்புப்படை துணை ஆணையராக மாற்றம்
- ஆயுஷ் மணி திவாரி சென்னை குற்ற ஆவணக் காப்பகத்தின் ஏடிஜிபியாக நியமனம்
- மாநில சைபர் க்ரைம் எஸ்பியாக இருந்த அசோக்குமார் பட்டாலியன் எஸ்பியாக பணியிடமாற்றம்
- சென்னை கோயம்பேடு துணை ஆணையராக இருந்த சுப்புலட்சுமி நிர்வாக பிரிவு துணை ஆணையராக நியமனம்
- ஆவடி மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையராக சங்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- ஜெயராம் ஐபிஎஸ் சென்னை ஆயுதபடை ஏடிஜிபியாக நியமனம்.
- மாநில சைபர் கிரைம் எஸ்பியாக இருந்த அசோக்குமார் பட்டாலியன் எஸ்பியாக பணியிடமாற்றம்.
- கோவை தெற்கு காவல் துணை ஆணையராக ஆர்.உதயகுமாருக்கு பதவி உயர்வு தரப்பட்டுள்ளது.
- ராமநாதபுரம் ஏஎஸ்பி சிவராமனுக்கு சேலம் வடக்கு துணை ஆணையராக பதவி உயர்வு