#BREAKING 7 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்
தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்
ஐபிஎஸ் அதிகாரிகள் 7 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தாம்பரம் மாநகர காவல் கூடுதல் ஆணையராக (தலைமையகம் மற்றும் போக்குவரத்து) இருந்த கபில் குமார் சி சரத்கர், மதுரை மாநகர காவல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். மதுரை காவல் ஆணையராக இருந்த அபிஷேக் தீட்சித், சென்னை இரயில்வே ஐஜியாக (IGP Railways) நியமிக்கப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த டாக்டர் ஜெ.லோகநாதன் சென்னை தொழில்நுட்பப் பிரிவு ஐஜியாகவும், டாக்டர் ஆர்.திருநாவுக்கரசு திருநெல்வேலி சரக டிஐஜியாகவும் (DIG), பி.பகலவன் சென்னை பெருநகர காவல் போக்குவரத்துப் பிரிவு (தெற்கு) இணை ஆணையராகவும் புதிய பொறுப்புகளை ஏற்றுள்ளனர்.
மேலும், சென்னை பெருநகர காவல் போக்குவரத்துப் பிரிவு (வடக்கு) இணை ஆணையராக இருந்த திஷா மிட்டல், சென்னை சட்டம் ஒழுங்கு (மேற்கு) மண்டல இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளதோடு, சென்னை சட்டம் ஒழுங்கு (கிழக்கு) மண்டல இணை ஆணையராக இருந்த பண்டி கங்காதர், தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் (TNPL) முதன்மை விழிப்புணர்வு அதிகாரியாக (Chief Vigilance Officer) அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

