#BREAKING ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

 
assembly assembly

ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

transfer

ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உள்துறை முதன்மை செயலர் பி.அமுதா உத்தரவிட்டுள்ளார். அதன்படி, காஞ்சிபுரம் எஸ்.பியாக உள்ள எம்.சுதாகர் கூடுதல் பொறுப்பாக செங்கல்பட்டு மாவட்ட (பொறுப்பு) எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி எஸ்பி என்.மோகன்ராஜ், விழுப்புரம் மாவட்ட எஸ்பி(பொறுப்பு) ஆக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை குற்றப்பிரிவு டிஐஜியாக உள்ள ஜியா உல்ஹக், விழுப்புரம் சரக டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அண்மையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு கூட, தமிழ்நாட்டில் முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடதக்கது.