ஐபிஎல் Trade- ராஜஸ்தானுக்கு முகமது ஷமி; லக்னோவுக்கு சாம் கரண்!
ஐபிஎல் வீரர்கள் டிரேடில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தம் நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, லக்னோ அணியின் முகமது ஷமி மற்றும் தமிழக இடது கை சுழற்பந்து வீச்சாளர் எம். சித்தார்த் ஆகியோர் ராஜஸ்தான் அணிக்கு டிரேடு செய்யப்பட உள்ளனர். இதற்குப் பதிலாக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரண் லக்னோ அணிக்கு வரவுள்ளார். 36 வயதான முகமது ஷமி, 2026 ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது அனுபவம் ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சுப் பிரிவுக்கு கூடுதல் பலமாக அமையும். குறிப்பாக, ஜோஃப்ரா ஆர்ச்சருடன் இணைந்து புதிய பந்தில் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கலாம்.
மறுபுறம், 2022 டி20 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்ற சாம் கரண், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் பங்களிக்கக்கூடியவர். காயம் காரணமாக 2026 சீசனில் விளையாடாத அவர், லக்னோ அணியின் ஆல்ரவுண்டர் தேவையைப் பூர்த்தி செய்யலாம். மேலும், ரிஷப் பண்ட் வெளியேறியதால் காலியாக உள்ள லக்னோ அணியின் கேப்டன் பொறுப்புக்கும் சாம் கரண் பரிசீலிக்கப்பட வாய்ப்புள்ளது. எய்டன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், மிட்செல் மார்ஷ் மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோரும் கேப்டன் போட்டியில் உள்ளனர். இதற்கிடையே, சமீபத்தில் TNPL கோப்பையை வென்ற தமிழக அணியில் இடம்பெற்ற எம். சித்தார்த்தும் ராஜஸ்தான் அணிக்கு டிரேடு செய்யப்பட உள்ளார். அவர் அடுத்து சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் தமிழக அணிக்காக விளையாடவுள்ளார். இந்த டிரேடு உறுதியானால், இரு அணிகளின் பலத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும்.

