ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி- ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை

 
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி- ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை

சென்னையில் நடைபெற உள்ள ஐபிஎல் பிளே ஆப் போட்டிகளுக்கான டிக்கெட் ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை - டெல்லி மோதும் ஐபிஎல் போட்டி.. டிக்கெட் வாங்க குவிந்த ரசிகர்கள்..

வரும் 23,24 ஆம் தேதிகளில் சேப்பாக்கம் மைதானத்தில் முதல் இரண்டு பிளே ஆஃப் போட்டிகள் நடைபெறவுள்ளன. பிளே ஆஃப் போட்டிகளுக்கான டிக்கெட் ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என சி.எஸ்.கே நிர்வாக இயக்குநர் தகவல் தகவல் தெரிவித்துள்ளார். இன்னும் ஓரிரு நாட்களில் டிக்கெட் விற்பனைக்கான தேதியை ஐபிஎல் நிர்வாகம் வெளியிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

16-வது ஐ.பி.எல். சீசன் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 31-ந்தேதி கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.  இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வரும் நிலையில், ஒவ்வொரு அணிகளும் தங்களது சொந்த ஊர்களில் 7 ஆட்டங்கள் ஆட முடிவு செய்யப்பட்டது.  அதன்படி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் 7 ஐ.பி.எல். ஆட்டங்கள் நடந்து முடிந்தன.  சேப்பாக்கத்தில் இதுவரை நடந்த 7 லீக் போட்டிகளுக்கும் நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவும் டிக்கெட் விற்பனை நடந்தது குறிப்பிடதக்கது.