இன்று ஐபிஎல் முதல் போட்டி : சென்னை சிதம்பரம் மைதானத்தின் பிட்ச் எப்படி இருக்கு?

 
1

இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு இடையே நடைபெறவுள்ளது. இரண்டு ஜாம்பவான் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற உள்ளதால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு அனைத்து சீசன்களையும் போலவே அதிகமாக தான் உள்ளது.

இந்த போட்டி குறித்து பல தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இந்த வரிசையில் தான் தற்போது இந்த போட்டி நடைபெறும் மைதானத்தின் பிட்ச் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலில் போட்டி நடைபெறவுள்ள பிட்ச் ஸ்பின் வேலைகளுக்கு எவ்வாறு இருக்கும் என்பது போன்ற பல தகவல்கள் தொடர்ந்து வெளியாகியுள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் பிட்ச் ரிப்போர்ட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த சேப்பாக்கம் பிட்ச் முழுக்க முழுக்க சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஒரு பிட்சாக உள்ளது.

மேலும் இந்த பிட்ச் மீடியம் ஃபாஸ்ட் பவுலர்களுக்கும் சாதகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த மைதானத்தில் பனிப்பொழிவு ஏற்படுவதால் ஸ்பின் மற்றும் பவுன்ஸ் என இரண்டு வகையான பந்துகளையும் பந்து வீச்சாளர்கள் நன்கு பயன்படுத்த இயலும். எனினும் இரண்டாவது பாதியில் ஆட்டம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக திரும்பலாம் என்றும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக இந்த போட்டியில் அதிக பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை நிச்சயம் பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது. இதுபோன்ற பிட்ச் காரணமாக இந்த இரு அணிகளுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவக்கூடும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.