"கலைஞர் கனவு இல்லம்- 25,000 வீடுகள் கட்டப்பட்டுள்ளது"- ஐ.பெரியசாமி
ஊராட்சி செயலாளர்கள் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதியளித்தார்.

சட்டப்பேரவையில் உரையாற்றிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “தமிழ்நாட்டில் 1,300 ஊராட்சி செயலாளர்கள் பணியிடங்கள் 2 மாத காலத்திற்குள் நிரப்பப்படும். தகுதி உள்ளவர்களுக்கு வெளிப்படைத் தன்மையோடு நிச்சயமாக பணிகள் வழங்கப்படும். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.1,122 கோடியில் 3,000 பள்ளி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. ரூ.4,000 கோடியில்
10,545 கிலோ மீட்டர் தூரம் சாலைகள் போடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இன்னும் 8 கிராமங்கள்தான் இணைக்கப்படாமல் உள்ளன. கலைஞர் கனவு இல்லம் திட்டத்திற்காக ரூ. 3,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 25,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. ரூ. 2,418 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மார்ச் மாதத்திற்குள் கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் 2 லட்சம் வீடுகளை கட்டி முடிக்கப்படும்” என்றார்.


