ஐஓபி வங்கி சார்பில் பைக் பழுதுநீக்கும் பயிற்சி..! இருபாலரும் விண்ணப்பிக்கலாம்..!
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் ஊரக சுய வேலைவாய்ப்பு நிறுவனம் சார்பில், 30 நாள் இலவச இருசக்கர வாகன பழுது நீக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இணைந்து இலவசமாக இருசக்கர வாகன பழுது நீக்கும் பயிற்சியானது வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சி ராமநாதபுரம் புது பேருந்து நிலையம் அருகே உள்ள பூமாலை வணிக வளாகத்தில் நடைபெற்ற உள்ளது.
நவம்பர் 12-ம் தேதி முதல் தொடங்கி 30 நாட்கள் நடைபெறுகிறது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்து, கிராமம், ஊராட்சி ஆகிய பகுதிகளில் உள்ள ஆண்கள் பெண்கள் இருபாலரும் கலந்து கொள்ளலாம். வயது 19 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
நவம்பர் 11-ம் தேதி வரை முன்பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சி நிறைவு பெற்றபின் சான்றிதழ் வழங்கி, புதிய தொழில் தொடங்க வங்கிக்கடன் பெற ஆலோசனை வழங்கி சுயதொழில் தொடங்க ஊக்குழிக்கப்படும்.
முன்பதிவு செய்ய 8825954443, 8056771986 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

